வடக்கின் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு



வட மாகாண கல்வி அமைச்சர் மற்றும் விவசாய அமைச்சர் ஆகியோர் இராஜினாமா செய்திருக்கும் நிலையில், அப் பதவிகளுக்கு புதிய இருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 

இதற்கமைய, வட மாகாண அமைச்சர்களாக, க.சர்வேஸ்வரன் மற்றும் அனந்தி சசிதரன் ஆகியோர் மூன்று மாதங்களுக்கு தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளனர். 

தம் மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுக்களை அடுத்து, வட மாகாண கல்வி அமைச்சராக இருந்த த.குருகுலராஜா மற்றும் விவசாய அமைச்சராக இருந்த பொ.ஐங்கரநேசன் ஆகியோர் இராஜினாமா செய்தனர். 

இதனையடுத்து உடனடி நடவடிக்கையாக அந்த அமைச்சுக்களை முதலமைச்சர் பொறுப்பேற்றிருந்தார். 

இந்நிலையில் மேற்படி இரு அமைச்சுக்களின் வேலைகள் கிடப்பில் உள்ளதால், மாகாண சபை உறுப்பினர் கந்தையா சர்வேஷ்வரனை மாகாண கல்வி அமைச்சராகவும், மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரனை மாகாண பெண்கள் விவகார அமைச்சராகவும் தற்காலிகமாக 3 மாதங்களுக்கு முதலமைச்சர் நியமித்துள்ளார். 

இது தொடர்பாக மாலை முதலமைச்சர் தனது இல்லத்தில் அவருக்கு ஆதரவு வழங்கிய 14 உறுப்பினர்களை சந்தித்து பேசிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார். 

இதன்போதே அவர் மேற்கண்ட விடயங்களைக் கூறியுள்ளார்.