மீதொட்டமுல்லயில் குப்பை கொட்டப்பட மாட்டாது



இனிமேல் மீத்தொட்டமுல்ல குப்பை மேடு இருந்த இடத்தில் திண்மக் கழிவுகளை கொட்டுவதில்லை என்று கொழும்பு மாநகர சபை உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது. 

அந்தப் பிரதேசத்தில் குப்பை கொட்டுவதை தடை செய்யுமாறு உத்தரவிடக் கோரி பிரதேசவாசிகளால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட போது கொழும்பு மா நகர சபை சார்பாக ஆஜராகியிருந்த சட்டத்தரணி இதனை தெரிவித்ததாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் கூறினார். 

திண்மக் கழிவுகளை கொட்டுவதற்காக மாற்றுத் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எவ்வாறாயினும் மனுதாரர் தரப்பில் ஆஜரான சட்டத்தரணிகள், மீதொட்டமுல்ல குப்பை மேடு காரமாக 40 இற்கும் அதிக உயிர்கள் பலியானதாக நீதிமன்றில் தெரிவித்தனர். 

குறித்த மனுவை விசாரித்து மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்று அந்த சட்டத்தரணிகள் கூறியுள்ளனர். 

அதன்படி வரும் செப்டம்பர் மாதம் 27ம் திகதி மனுவை விசாரிப்பதாக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்று அத தெரண நீதிமன்ற செய்தியாளர் கூறினார்.