காஞ்சிரங்குடாவில் கவிழ்ந்தது



-எஸ்.கார்த்திகேசு
திருக்கோவில், காஞ்சிரங்குடா பாலத்தின் மீதாக இன்று அதிகாலை பயணித்த காரொன்று, வேகக் கட்டுப்பாட்டை இழந்து, வாவிக்குள் தவறி விழுந்துள்ளது.
அக்கரைப்பற்றிலிருந்து பொத்துவில் நோக்கிப் பயணித்த காரே இந்த அசம்பாவிதத்துக்கு உள்ளாகியுள்ளது எனத் தெரிவித்த பொலிஸார், இந்தக் காரில் பயணித்த மூவரும் காப்பாற்றப்பட்டுள்ளனர் எனவும் கூறினர்.