ஞானசார நாவடக்கத்துடன் பிணையில் விடுதலை



பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 

முன்னதாக, நீதிமன்றத்தில் ஆஜராகுவதை தவிர்த்தமையால் இவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. 

இந்தநிலையில், அவர் இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்தார். 

இதனையடுத்து, முன்னதாக வழங்கப்பட்டிருந்த பிணைக்கு அமைய அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். 

இதேவேளை, தான் நீதிமன்றத்தில் ஆஜராகாது போனமை, தனக்கிருந்த மரண அச்சுறுத்தல் காரணமாகவே என, ஞானசார தேரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி சுட்டிக்காட்டியுள்ளார். 

இதனையடுத்து, அடுத்த கட்ட வழக்கு விசாரணை ஆகஸ்ட் 9ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதோடு, அன்றையதினம் நீதிமன்றத்தில் ஆஜராகும் படி சந்தேகநபருக்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

நீதிமன்றிலிருந்து ஞானசார ஊடகங்களுக்கு எவ் வித கருத்துக்களும் வழங்காது, வெளியேறினார்.