கிழக்குப் பல்கலைக்கழகம் சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவனத்தின் தமிழ் உலக ஆராய்ச்சி மாநாடு 2017 இம்மாதம் (ஆனி) 15, 16, 17ம் திகதிகளில் மட்டக்களப்பில் நடைபெறவுள்ளது.
போரும், போருக்குப் பின்னரான காலத்தும் தொட்டுணராப் பண்பாடு மரபுரிமைகள் எதிர்கொள்ளும் சவால்களும், அவற்றின் முக்கியத்துவமும் என்ற தலைப்பிலான 2017ம் ஆண்டுக்கான உலக ஆராய்ச்சி மாநாடு கிழக்குப் பல்கலைக்கழகம் சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவனத்தின் ஏற்பாட்டில் இராஜதுரை அரங்கில் நடைபெற இருக்கின்றது.
மேற்குறித்த ஆராய்ச்சி மாநாடு தொடர்பாக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவனத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலாநிதி சி.ஜெயசங்கர் அவர்கள் மாநாடு தொடர்பாக தெரிவிக்கையில்,
பண்பாட்டு மரபுரிமைகள் பற்றிய உரையாடலில் மிகப் பெரும்பாலும் தொட்டுணரக்கூடியவைகளாக இருக்கின்ற சிற்பம், ஓவியம், கட்டடம், இடம் என்பன முக்கியத்துவம் பெறுகின்ற அதேவேளையில், சடங்குகள், கொண்டாட்டங்கள், ஆற்றுகைகள் உள்ளிட்ட சமூகப் பண்பாட்டுப் புழக்கங்கள் மற்றும் வாழ்வியல் செயற்பாடுகள் என்பன வாழ்வை வடிவமைப்பதில் அதிக செல்வாக்கினைக் கொண்டிருப்பினும் அதிக கவனத்தைப் பெறுவதாக இல்லை.
இந்நிலையில் போர்க் காலத்திலும் போருக்குப் பின்னரான காலத்திலும் மனித வாழ்வை வடிவமைக்கின்ற பண்பாட்டு மரபுரிமைகள் சவால்களை எதிர்கொண்டு வருவதுடன் முக்கியமான பங்கினையும் ஆற்றி வருகின்றன.
எனவே உணர்ந்தும் உணராமலும் அறிந்தும் அறியாமலும் வாழ்வியலை வடிவமைத்துக் கொண்டிருக்கின்றவற்றில் பேசாப் பொருளாகவே அதிகம் காணப்படுகின்ற தொட்டுணராப் பண்பாட்டு மரபுரிமைகள் மீதான கவனத்தைக் கோரும் வகையிலும், அவற்றில் இக்காலத் தேவையை அறியவும், உணரவும் கூடிய வகையிலும் உலக ஆராய்ச்சி மாநாடு 2017 திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டிருக்கின்றது எனவும் அவர் தெரிவித்தார்.
இம்மாதம் 15ம் திகதி மாலை 06.30 மணிக்கு தொடக்க விழாவுடன் ஆரம்பமாகும் இம் மாநாட்டில் 120 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட உள்ளதுடன் 17ம் திகதி மாலை பறங்கியர் கலைவிழாவும் 18ம் திகதி கலைப்பண்பாட்டுக் களப்பயணமும் இடம்பெற இருப்பதாகவும் மேலும் தெரிவித்தார்.

Post a Comment
Post a Comment