அவுஸ்திரேலியாவில் மலைப்பாம்பு ஒன்று கவனமாக வீதியை கடக்க வேண்டுமென்பதற்காக நபர் ஒருவர் வீதியின் குறுக்கே படுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் மெத்யூ, இவர் டம்பியர் போர்ட் எனும் பகுதியில் தனது நண்பருடன் வீதியில் பேசிக்கொண்டு சென்றுள்ளார்.
அப்போது வீதியின் நடுவே திடீரென்று சுமார் 2.5 மீட்டர் நீளம் கொண்ட மலைப்பாம்பு ஒன்று சென்றுள்ளது.
அது போக்குவரத்து மிகுந்த பகுதி என்பதால், அவ்வழியே செல்லும் வாகனங்கள் அந்த மலைப்பாம்பின் மீது மோதினால் பாம்பு உயிரிழக்க நேரிடும் என்று எண்ணிய அவர் உடனடியாக பாம்புக்கு அரணாக வீதியில் படுத்துள்ளார்.
மலைப்பாம்பு வீதியை கடக்க ஏறத்தாழ 5 நிமிடங்கள் ஆகியுள்ளது. அதுவரை, பாம்புக்கு அருகில் வீதியில் படுத்திருந்த மெத்யூ, பாம்பு பத்திரமாக கடக்கும்வரை அதற்கு அரணாக இருந்துள்ளார்.
இச்சம்பவத்தை அவரது நண்பர் புகைப்படம் எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். தற்போது அந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.


Post a Comment
Post a Comment