(விசேட நிருபர்)
காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள மஞ்சந்தொடுவாய் பிரசேதத்தில் வேன் ஒன்று ஹோட்டல் ஒன்றுக்குள் புகுந்ததில் ஹோட்டல் சேதமடைந்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
நேற்றிரவு திங்கட்கிழமை (26) மஞ்சந்தொடுவாய் முதியோர் இல்ல வீதியில் சென்று கொண்டிருந்த வேன் வேக கட்டுப்பாட்டை இழந்து அந்த வீதியிலுள்ள ஹோட்டலுக்குள் புகுந்துள்ளது.
இதனால் குறித்த ஹோட்டலில் இருந்த தளர்பாடங்கள் உடைந்து சேதமடைந்துள்ளதுடன் குறித்த வேனின் கண்ணாடிகளும் உடைந்துள்ளன.
குறித்த வேன் வேக கட்டுப்பாட்டை இழந்ததினாலேயே இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

Post a Comment
Post a Comment