சிறந்த உணவு உற்பத்தியாளர்களுக்கு ஜனாதிபதி விருது



தேசிய மட்டத்தில் சிறந்த உணவு உற்பத்தியாளர்களுக்கு ஜனாதிபதி விருது வழங்கும் நிகழ்வு திருகோணமலை கந்தளாய் பிரதேசத்தில் இன்று இடம்பெற்றது. 

இதில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி தொடரும் வறண்ட காலநிலை காரணமாக நாட்டின் அரிசி உற்பத்தி தொடர்ந்து விழ்ச்சி அடைந்து வருகின்றது என்று குறிப்பிட்டார். 

இந்த நிலைமை இலங்கைக்கு மட்டுமல்ல உலகின் பல நாடுகள் இதற்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. 

ஆகவே, இன்று நாட்டில் 50 வீதம் அரிசி உற்பத்தி வீழ்ச்சி அடைந்துள்ளது. 

அரிசி பற்றாக்குறையை போக்கும் முகமாக பாகிஸ்தான், மியான்மார் போன்ற நாடுகளில் இருந்து எதிர்வரும் காலங்களில் இறக்குமதி செய்து அதை நியாய விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார். 

இந்த நிகழ்வில் மத்திய மற்றும் மாகாண அமைச்சர்கள், கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் உட்பட பல அரச அதிகாரிகளும் கலந்துகொண்டனர்