“அபிட்ட கதாகரன்ன தென்ன"



இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்ட போது சில உறுப்பினர்களால் கடுமையான இடையூறு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இழுவைப்படகுகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி தொடர்பாக இன்றைய தினம் நாடாளுமன்றில் உரையாற்றும் போதே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
குறிப்பாக மஹிந்த தரப்பு ஆதரவாளரான தினேஸ் குணவர்தன உட்பட சிலரே கடும் குழப்பங்களை ஏற்படுத்தினர்.
இதன்போது ஆத்திரமடைந்த விஜயகலா மகேஸ்வரன்,
“அபிட்ட கதாகரன்ன தென்ன, தினேஸ் குணவர்தன மாத்தயா அபிட்ட கதாகரன்ன தென்னகோ...... என சிங்களத்தில் உரையாற்றினார்.
எமக்கும் உரையாற்றுவதற்கு இடம் தாருங்கள், நீங்கள் எப்பொழுதும் இனவாதத்தையே பேசுகின்றீர்கள், நாம் பல கஷ்டங்களை சுமந்து கொண்டு இருக்கின்றோம். பொய்யாக கூச்சலிடாதீர்கள்.. என சிங்களத்தில் காரசாரமாக கூறியுள்ளார்.
இதையடுத்து நாடாளுமன்றில் தொடர்ந்து குழப்பங்கள் ஏற்பட்டன.
தொடர்ந்து, தினேஸ் குணவர்தன குறித்த தமது ஆதங்கத்தை விஜயகலா மகேஸ்வரன் வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.