மட்டக்களப்பு - வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்டூர் - வெல்லாவெளி பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று புதன்கிழமை இரவு (05) புளியடிபாலம் அருகே, அறுவடை இயந்திரத்தை ஏற்றி வந்த உழவு இயந்திரத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியுள்ளது.
இதன்போது, மோட்டார் சைக்கிளைச் செலுத்தி வந்த மண்டூரைச் சேர்ந்த தங்கதுரை வயது (38) என்பவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த வெல்லாவெளி பொலிஸார் உழவு இயந்திரத்தின் சாரதியை கைதுசெய்துள்ளதுடன், சடலத்தை பிரேத பரிசோதனைகளுக்காக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இது குறித்த மேலதிக விசாரணையை வெல்லாவெளிப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment
Post a Comment