சிம்பாப்பே அணி முதலில் துடுப்பாட்டம்



இலங்கை மற்றும் சிம்பாப்பே அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று இடம்பெறுகின்றது. 

அதன்படி இன்றைய போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சிம்பாப்பே அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. 

போட்டி கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெறுகின்றது. 

முன்னதாக இரு அணிகளுக்கும் இடையில் இடம்பெற்ற ஒருநாள் தொடரில் 3-2 என்ற அடிப்படையில் சிம்பாப்பே அணி தொடரைக் கைப்பற்றியது.