உலக சாம்பியன்ஷிப் பாரா மெய்வல்லுநர் போட்டிகளில் (World Para Athletics Championships) இலங்கை முதற்தடவையாக வெள்ளிப்பதக்கம் ஒன்றை வென்றுள்ளது.
ஆடவருக்கான ஈட்டி எறிதல் போட்டியில் தினேஷ் பிரியந்த அந்தப் பதக்கத்தை ஈட்டிக்கொடுத்துள்ளார்.
லண்டனில் நடைபெறும் உலக சாம்பியன்ஷிப் பாரா மெய்வல்லுநர் போட்டிகளில் ஆடவருக்கான ஈட்டி எறிதல் F46 பிரிவில் தினேஷ் பிரியந்த பங்கேற்றார்.
57.93 மீற்றர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்த அவர் வெள்ளிப்பதக்கத்தை தன்வசப்படுத்தினார்.
இது இந்தப் போட்டிகளில் இலங்கைக்குக் கிடைத்த முதல் வெள்ளிப்பதக்கமாகும்.
இந்தியாவின் சுந்தர் சிங் குர்ஜார் தங்கப்பதக்கத்தையும் சீனாவின் சுங்லியேன் குவோ வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.
உலக சாம்பியன்ஷிப் பாரா மெய்வல்லுநர் போட்டிகளில் 2013 ஆம் ஆண்டு பிரதீப் சஞ்சய 400 மீற்றர் ஓட்டத்தில் T46 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றமையும் இங்கு நினைவுகூரத்தக்கது.


Post a Comment
Post a Comment