தன்னை காரணமாக கொண்டு பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொள்ள வேண்டாம்



தன்னை ஒரு காரணமாக கொண்டு நோயாளர்களை சிரமத்திற்கு உள்ளாக்கும் பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொள்ள வேண்டாம் என வைத்திய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுப்பதாக இலங்கை மருத்துவ சபையின் தலைவர் பேராசிரியர் காலோ பொன்சேகா கூறியுள்ளார்.
இலங்கை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் அனுருந்த பாதெனிய உள்ளிட்ட வைத்திய அதிகாரிகள் இன்று பேராசிரியரை சந்தித்து எழுத்து மூலம் கோரிக்கை ஒன்றை முன்வைத்தனர்.
தன்னை அனைத்து சந்தர்ப்பங்களிலும் அந்த பதவியில் நீடிக்குமாறு கோருவதற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்திற்கு உரிமையில்லை என பேராசிரியர் காலோ பொன்சேகா கூறியுள்ளார்.
கட்டளைச் சட்டத்திற்கு அமைய மேற்கொள்ளப்பட்ட நியமனம் என்பதால் 5 வருடங்களுக்கு பதவியில் நீடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தனது பதவிக்காலம் நிறைவடைந்துள்ளது என்ற எண்ணத்துடனேயே இருப்பதாகவும் காலோ பொன்சேகா கூறியுள்ளார்.
இலங்கை மருத்துவ சபையின் தலைவர் பதவியை அடிப்படையாகக் கொண்டு பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொள்ள வேண்டாம் என அரச வைத்திய அதிகாரிகளிடம் கரம் கூப்பி கோரிக்கை விடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.