(க.கிஷாந்தன்)
ஒரு காலப்பகுதியில் விவசாய துறைக்கு வழங்கப்படும் நிதிகள் அல்லது வசதிகள் எதுவும் தோட்டப்புறங்களுக்கு வழங்கப்படவில்லை. நான் மத்திய மாகாண அமைச்சாராக பொறுபேற்ற பின்பு தான் அனைத்து விடயங்களை தோட்டங்களுக்கு கொண்டு வந்திருக்கிறேன். நன்னீர் மீன் வளர்ப்பு கூட நன்னீர் மீன்பிடி துறை அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் பேசி எடுத்ததிற்கிணங்க இன்று 500 லட்சம் ரூபா நுவரெலியா மாவட்டத்திற்கு மாத்திரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதன் தொழிலாளர்கள் நல்ல போசனை மட்டத்தினையும் மேலதிக வருமானத்தினை பெற முடியுமென மத்திய மாகாண தமிழ் கல்வி, விவசாயம், மீன்பிடி, சிறுகைதொழில், இந்து கலாசார அமைச்சர் எம் .ரமேஸ்வர்ன தெரிவத்தார்.
நீர் வளத்தினை பயன் படுத்தி சூழலுக்கு ஏற்றவகையில் நீர்வள விவசாயமான நன்னீர் மீன் வளர்ப்பினை ஊக்குவித்து தோட்டத் தொழிலாளர்களின் போசனை மட்டத்தினை விருத்தி செய்யும் முகமாக ஒழுங்கு செய்யப்பட்ட நன்னீர் மீன் வளர்ப்புக்கு கிடங்கு வெட்டுவதற்கான காசோலை வழங்கும் நிகழ்வு மத்திய மாகாண அமைச்சர் எம்.ரமேஸ்வர்ன் தலைமையில் 22.07.2017 அன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் மேலதிக வருமானத்தினை பெற்று வறுமையை ஒழிக்கும் தேசிய வேலை திட்டத்தின் கீழ் இந் நன்னீர் மீன் வளர்ப்பு ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதில் ஸ்ரதன், விக்டன், கரோலிணா, டன்சினன், நயப்பன, மிஸ்டில் ஆகிய தோட்ட முகாமையாளர்களுக்கு இத்திட்டம் செய்ப்படுத்துவதற்குரிய 335 லட்சம் ரூபா பெறுமதியான காசோலைகள் இதன்போது வழங்கப்பட்டதுடன் பன்மூர் குளத்தில் அதிதிகளால் மீன் குஞ்சுகளும் விடுவிக்கப்பட்டன.
இந்நிகழ்வுக்கு மத்திய மாகாண சபை உறுப்பினர்களான கணபதி கணகராஜ், பிலிப்குமார், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளர் டப்ளியூ ஜே.ரணசிங்க, நீர் வள அமைச்சின் தலைவர் சட்டத்தரணி, உபாலி மோட்டி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Post a Comment
Post a Comment