(க.கிஷாந்தன்)
நுவரெலியா மாவட்டத்தில் டெங்கு பரவும் அபாயம் குறைந்து காணப்பட்ட போதிலும் வெளிமாவட்டங்களில்இருந்து வருகை தருபவர்களினால் டெங்கு நோய் பரவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்தவகையில் லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஒன்று 23.07.2017 அன்று முன்னெடுக்கப்பட்டது.
வைத்தியசாலை நிர்வாக பிரிவினர், லிந்துலை பொலிஸார், விடியல் அமைப்பின் உறுப்பினர்கள், கொட்டகலை தாதிமார் பயிற்சி நிலையத்தின் மாணவிகள் ஆகியோர் இணைந்து இந்த டெங்கு ஒழிப்பு சிரமதான பணியில் ஈடுப்பட்டனர்.
டெங்கு நோய் பரவும் இடங்களை இணங்கண்டு துப்பரவு செய்ததுடன், டெங்கு குடம்பிகள் காணப்படும் இடங்களையும் அழித்து அப்புறப்படுத்தினர். இந்த சிரமதான பணியில் சுமார் 50ற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.


Post a Comment
Post a Comment