நுரைச்சோலை மூன்றாவது உற்பத்தி இயந்திரம் பாதிப்பு



நுரைச்சோலை அனல் மின்நிலையத்தின் மூன்றாவது உற்பத்தி இயந்திரத்தில் தொழினுட்ப பிரச்சினை ஏற்பட்டுள்ளது. 

நீராவியை வௌியேற்றும் குழாய் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள தொழினுட்ப பிரச்சினை காரணமாக மின்னுற்பத்தி நடவடிக்கைகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. 

இது தொடர்பில் அத தெரணவுக்கு கருத்து வௌியிட்ட இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் சுலக்‌ஷன ஜயவர்தன கருத்து தெரிவித்தார். 

இந்தநிலையில் பழுது பார்க்கும் நடவடிக்கைககள் துரிதமாக இடம்பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டார்.