பட்டியடிப்பிட்டியில், வேகக் கட்டுப்பாட்டை இழந்த வேன் உழவு இயந்திரத்தில் ஏறிற்று



கதிர்காமம்,ஜெயிலானி போய் திரும்பிய அக்கரைப்பற்று பயணிகள் வேன் நாய் குறுக்கறுத்ததால் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் தரித்திருந்த உளவு இயந்திரத்தில் மோதி உள்ளது.
இன்று காலை 3:10 அளவில் பட்டியடிப்பிட்டி ,பெற்றோல் நிரப்பு நிலையத்திற்கு அருகில் விபத்து சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது.
இது வரை உயிர் இழப்புகள் பதிவாகவில்லை எனினும்,அதிக உபாதையிற்கு உள்ளான சில்மி எனும் இளைஞன் கண்டி போதனா வைத்தியசாலை மாற்றப்பட்டுள்ளார் ஏனையவர்கள் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.