பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் மூவருக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இந்த வகையில், கோட்டை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக செயற்பட்ட பிரதான பொலிஸ் பரிசோதகர் சுமித் குணரத்ன, கம்பஹா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய பொலிஸ் பரிசோதகர் ஏ.டபிள்யு. கப்பார், பொலிஸ் தலைமையக குற்றப் புலனாய்வுப் பிரிவு பிரதான பொலிஸ் பரிசோதகர் எச்.எச்.எஸ். லக்ஷ்மன் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் மா அதிபரின் பணிப்பின் பேரில் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் இந்த இடமாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.


Post a Comment
Post a Comment