-எம்.றொசாந்த்
வடமாகாண முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் ஏ.ஜெயசிங்க, குற்றப்புலனாய்வு பிரிவினரால், இன்று (15) கைதுசெய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புங்குடுதீவு மாணவி கொலைச் சம்பவம் தொடர்பில், சுவிஸ்குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார், பொலிஸ் காவலில் இருந்து தப்பிச் சென்றமை தொடர்பாக வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக, வடமாகாண முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் ஏ.ஜெயசிங்க, கொழும்பு குற்றப்புலனாய்வு துறையினரால் அழைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையிலேயே, அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.


Post a Comment
Post a Comment