சவூதி இளவரசர் இலங்கையில்



சவூதி அரேபியாவின் இளவரசரான பஹத் பின் முக்ரீன் பின் அப்துல் அஸீஸ் அல் சவூத், நேற்று இலங்கையை வந்தடைந்தார்.
4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்தடைந்த சவூதி இளவரசரை, இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், மட்டக்களப்பு கெம்பஸ் நிறைவேற்று பணிப்பாளர் ஹிராஸ் ஹிஸ்புல்லாஹ், அஷ்ஷெய்யித் மசூர் மௌலானா ஆகியோர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வரவேற்றனர்.