ஒன்றா,இரண்டா ஆசைகள்?



சீனாவின் ஷென்சென் நகரில் நூற்றுக்கும் அதிகமான ஐபோன்களைத் திருட முயன்ற பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் ஐபோன்களை ஹாங்காங்-இல் இருந்து மெயின்லாந்துக்கு கடத்திச்செல்ல இருந்தமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
102 ஐபோன்களை தனது உடலில் ஒட்டிக் கொண்டதோடு, 15 ஆடம்பர கைக்கடிகாரங்களையும் வைத்திருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வித்தியாசமான ஆடை அணிந்திருந்ததால் சந்தேகமடைந்த சுங்கத்துறை அதிகாரிகள், குறித்த பெண்ணை சோதனை செய்ததில் கடத்தல் விவகாரம் கண்டறியப்பட்டது.
மேலும், அங்கு வைக்கப்பட்டிருந்த மெட்டல் டிடெக்டர்களும் கடத்தலில் ஈடுபட்ட பெண்ணை சிக்க வைத்துள்ளது.
இவரது உடலில் நான்கு லேயர்களில் ஐபோன்களை சுற்றிக் கட்டியிருந்துள்ளார். இவரிடம் இருந்து மீட்கப்பட்ட பொருட்களின் மொத்த எடை 9 கிலோ என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மெயின்லாந்தில் இருந்து சீனாவிற்கு ஐபோன்களைக் கடத்தியதாக பலரை சீன சுங்கத்துறை அதிகாரிகள் ஏற்கனவே பலமுறை கைது செய்துள்ளனர்.
ஹொங்காங் மற்றும் இதர பகுதிகளை விட மெயின்லாந்தில் ஐபோன்களுக்கான வரி கூடுதலாக 30 சதவிகிதம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.