உலக சந்தைக்கும் நுழையும் போராட்டம்



ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகையை மீண்டும் பெற்றுக் கொண்டதன் மூலம் உலக சந்தைக்கும் நுழையும் போராட்டத்தை தற்போது ஆரம்பித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார். 

ஐரோப்பிய வர்த்தக சம்மேளத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட பொருளாதார அபிவிருத்தி முன்னுரிமையை மீண்டும் ஏற்படுத்தல் சம்பந்தமாக இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார். 

ஆடை துறைக்கு மாத்திரம் என்று வரையறுக்கப்பட்டிருந்த தொழில்துறை தற்போது வேறு துறைகளிலும் விரிவடைந்திருப்பதாக பிரதமர் கூறியுள்ளார். 

வருங்காலத்தில் கண்டியில் இருந்து ஹம்பாந்தோட்டை வரையிலான தொழில் வலயம் ஒன்றை உருவாக்குவதற்கும் புதிய துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களை உருவாக்குவதற்கும் எதிர்பார்ப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறினார். 

சிலர் 2 ஆண்டு காலத்தில் மேற்கொள்ளப்பட்ட விடயங்கள் தொடர்பில் கேள்வி எழுப்புவதாகவும், ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகையை மீண்டும் பெற்றுக் கொண்டது மிகப் பெரிய வெற்றி என்றும், இதனூடாக உலகின் மிகப் பெரிய தொழிற்சந்தையை பிடிப்பது தனது நோக்கம் என்றும் அவர் கூறியுள்ளார். 

அதனூடாக புதிய யுகத்தை நோக்கிய பயணம் ஆரம்பிக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.