டெங்கு பரவும் சூழலினை தடுக்க அட்டனில்




(க.கிஷாந்தன்)

நாட்டில் டெங்கு நோயாளர்கள் அதிகரிப்பினை தொடர்ந்து பொது மக்களை அறிவுறுத்தும் முகமாக அட்டன் ரிகோபோத் பாலர் பாடசாலை மாணவர்கள், பெற்றோர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட டெங்கு பரவும் சூழலினை தடுக்கும் பேரணியூடான வேலைத்திட்டம் ஒன்று 18.07.2017 அன்று அட்டனில் நடைபெற்றது.

இப்பேரணி அட்டன் கொமர்ஷல் வங்கிக்கு முன்னால் ஆரம்பமாகி அட்டன் கார்கீல்ஸ் சந்தி வரை சென்றது. இப்பேரணியில் கழிவுகளை வகைப்படுத்துவதற்கு வெவ்வேறான வர்ணங்களில் பொலித்தின் பொருளுக்கு ஒரு வர்ணமும், உக்கும் குப்பை, கண்ணாடி, உலோகங்கள் போன்றவற்றினை பிரித்து வர்ண குப்பை தொட்டில்களில் இடுவது தொடர்பாக பொது மக்களுககு அறிவுத்தும் வகையில் இவ்வேலைத்திட்டம் அமைந்திருந்ததன.

இதன் போது கழிவு பொருட்களை மீள் சுழற்சி செய்து எவ்வாறு சுற்றுப்புற சூழலை அழகுபடுத்தலாம் என்பது தொடர்பாக செயல்முறை செயற்ப்பாடுகளும் காட்சிப்படுத்தப்பட்டன.

இந்த பேரணியில் கலந்து கொண்ட மாணவர்களும், பெற்றோர்களும் வீதியின் இரு மருங்கிலும் காணப்படும் பொலித்தீன் மற்றும் ஏனைய கழிவு பொருட்களையும் அகற்றினர்.

அட்டன் டிக்கோயா நகர சபையின் பொது சுகாதார பரிசோதகர் கே.பாலகிருஸ்ணன் அவர்களின் வழிகாட்டலில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு அட்டன் டிக்கோயா நகர சபை செயலாளர் மற்றும் அதிகாரிகள், பாலர் பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள், பொது மக்கள் பலரும் கலந்து கொண்டனர்