துரியன்கஸ் சந்தியிலுள்ள குப்பைகளைக் கொட்டும் பகுதியில் தீ



நீர்கொழும்பு கடான துரியன்கஸ் சந்தியில் அமைந்துள்ள பாரிய குப்பைகளைக் கொட்டும் பகுதியில் தீபற்றியுள்ளது.
நீர்கொழும்பு தீயணைப்புப் பிரிவினர் மற்றும் பிரதேசவாசிகள் ஒன்றிணைந்து தீயை அணைக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
குப்பைகளை குறித்த பகுதியில் கொட்ட வந்தவர்களால் தீ வைக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
ஏனைய பகுதிகளிலிருந்து துரியன்கஸ் சந்தியில் குப்பைகளைக் கொட்டுவதால் தாம் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்குவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்