அக்கரைப்பற்று மின் வலுக் கட்டமைப்பில் மாற்றம்.



(SUHAIB)
அக்கரைப்பற்று மாநகர பிரதேசங்களுக்கு இலங்கை மின்சார சபையினால் ஏற்கனவே 11000 W மின்சாரத்தினை கொண்ட பழைய மின் மாற்றிகளினூடாக மின்சாரம் 230 W ஆக மாற்றி அவை பாவனையாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது.
அவ்வாறு வழங்கப்பட்டு வந்த மின்சாரத்தின் மூலம் பல தடைகள் ஏற்பட்டு வந்துள்ளது.
தற்போது 2017.07.15 ஆந் திகதி சனிக் கிழமை அக்கரைப்பற்று பிரதான வீதியில் ஆதார வைத்தியசாலைக்கு முன்பாகவுள்ள 11000 W களைக்களைக் கொண்ட 02 மின்மாற்றிகள் 33000 W களைக் கொண்ட 02 மின் மாற்றிகளை இலங்கை மின்சார சபை மாற்றியுள்ளது.
அதன் மூலம் 11000 W மின்சாரத்தினை நுகர்ந்த மின் பாவனையாளர்கள் 33000 W மின்சாரத்தினை நுகர்கின்ற அதேவேளை எதுவித தடைகளும் இன்றி பயன்படுத்தவுள்ளனர்.