அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் புதிய தாதிக பரிபாலருக்கு வரவேற்பு



போட்டிப்பரீட்சை மூலம் தாதிக பரிபாலகராக தெரிவு செய்யப்பட்ட அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சிரேஸ்ட தாதி உத்தியோகத்தராக கடமையாற்றும் P.T.நவ்பருக்கான பாராட்டு நிகழ்வும், வரவேற்பும் இன்று வைத்தியசாலை கூட்ட மண்டபத்தில் தாதி உத்தியோகத்தர் ஜனாப். பரீஸ் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றுது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் அவர்களும், வைத்தியர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், நிருவாக உத்தியோகத்தர்கள், அவரின் குடும்பத்தினர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தத்துடன் அவருக்கான ஞாபகச் சின்னங்களும் வழங்கி வைத்து கெளரவிக்கப்பட்டார்.