ஹியூமன் பெபிலோமா என்ற வைரஸ் தடுப்பூசியை இன்று முதல் தேசிய நோய் தடுப்பு செயற்றிட்டத்திற்கு அறிமுகப்படுத்தவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
பத்து வயதை பூர்த்தி செய்த தரம் ஆறில் கல்வி கற்கும் மாணவிகளுக்கு இன்று முதல் இந்த தடுப்பூசி ஏற்றப்படவுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றாநோய் தடுப்புப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
கர்ப்பப்பை புற்றுநோயை தடுக்கும் நோக்குடன் இந்த தடுப்பூசி ஏற்றப்படவுள்ளதாக டொக்டர் சமித கினிகே கூறியுள்ளார்.
நாட்டில் வருடமொன்றில் சுமார் 1000 பெண்கள் கர்ப்பப்பை புற்றுநோய்க்குள்ளாகுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, இந்த நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு நீண்டநாள் தீர்வாக காணப்படும் ஹியூமன் பெபிலோமா தடுப்பூசியை பெற்றுக் கொடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக டொக்டர் சமித கினிகே தெரிவித்துள்ளார்.
நோயை கண்டறிவதற்கான ஆரம்பகட்ட சோதனைகளை மேற்கொள்ளுதல் மற்றும் நோய்த்தடுப்பு ஊசிகளை பெற்றுக் கொடுத்தல் என்பன கர்ப்பப்பை புற்றுநோயை தடுப்பதற்கு உலகளாவிய ரீதியில் பின்பற்றப்படும் நடைமுறைகளாகும்.


Post a Comment
Post a Comment