(க.கிஷாந்தன்)
அட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட அட்டன் புனித கெப்ரியல் மகளிர் வித்தியாலயத்தில் புதிய கட்டிட திறப்பு விழா 11.07.2017 அன்று மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தலைமையில் இடம்பெற்றது.
அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை என்ற வேலைத்திட்டத்திற்கமைய 180 இலட்சம் ரூபா செலவில் இந்த புதிய கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வுக்கு மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.ராஜாராம், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மஸ்கெலியா மற்றும் நுவரெலியா தொகுதி அமைப்பாளர்களான டபிள்யூ.ஜீ.ரணசிங்க, அட்டன் கல்வி வலய பணிப்பாளர், அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.


Post a Comment
Post a Comment