பொலிஸ் பரிசோதகர்கள் சிலருக்கு இடமாற்றம்



பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் 05 பேருக்கு உடனடி இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. 

சேவையின் அவசியம் கருதி, பொலிஸ் மா அதிபரின் பரிந்துரைக்கமைய தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. 

அதன்படி மன்னார் தலைமையகத்தில் பணியாற்றிய பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜே்.எம். ருத்ரிகோ களனி வலயத்திற்கும், கெப்பதிகொல்லேவ பொலிஸ் நிலையத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகர் ஆர் எம்.ஆர். ரத்னாயக்க மன்னார் பொலிஸ் நிலையத்திற்கும் இடமாற்றப்பட்டுள்ளனர். 

இது தவிர அநுரதபுரம் வலயத்தில் பணியாற்றிய பிரதான பொலிஸ் பரிசோதகர் டப்ளியூ. கே. ஜயந்த கெப்பதிகொல்லேவ பொலிஸ் நிலையத்திற்கும், எஹலியகொட பொலிஸ் நிலையத்தின் நிலைய அதிபராக இருந்த பிரதான பொலிஸ் பரிசோதகர் என்.சீ. தர்மசேன காலி வலயத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர்.