கிழக்குப் பல்கலைக்கழக வந்தாமூலை வளாக நிர்வாகக் கட்டடத்தை முற்றுகையிட்டுள்ள மாணவர்களை உடனடியாக வெளியேறுமாறு, ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் வி.தியாகேஸ்வரன், இன்று (11) உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள், ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து, 63ஆவது நாளாக சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், செவ்வாய்கிழமை (08) பிற்பகல், நிர்வாகக் கட்டடத்தை முற்றுகையிட்டனர்.
இதன்காரணமாக, பல்கலைக்கழகத்தின் நிர்வாக நடவடிக்கைள் முற்றாகத் தடைப்பட்டதுடன், நிர்வாக நடவடிக்கை மேற்கொள்வதற்கான சூழல் இல்லையெனக் கோரி, கல்விசாரா ஊழியர்களும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, நிர்வாகக் கட்டத்தை முற்றுகையிட்டு, நிர்வாக நடவடிக்கைளுக்கு இடையூறு விளைவிக்கின்றனர் என, இதற்குத் தலைமை தாங்கும் 19 மாணவர்களுக்கு எதிராக ஏறாவூர்ப் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்து


Post a Comment
Post a Comment