பெற்றோலிய கூட்டுத்தாபன தொழிற்சங்க தலைவர் உள்ளிட்ட 16 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ஆர்ப்பாட்ட நடவடிக்கையின் போது ஏற்பட்ட குழப்பநிலையைத் தொடர்ந்து, கடந்த 26ம் திகதி கைதுசெய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்ட பெற்றோலிய கூட்டுத்தாபன தொழிற்சங்க தலைவர் உள்ளிட்ட 16 பேரையும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு தெரியப்படுத்தப்பட்டது.
எனினும், அவர்கள் அதனை செய்யத் தவறியமையால், நீதிமன்றம் இவர்களுக்கு எதிராக பிடியாணை பிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
இதற்கமைய, குறித்த 16 பேரும் இன்று நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில், பிணை வழங்குமாறு கோரினர்.
இதனை கருத்தில் கொண்ட கொழும்பு மேலதிக நீதவான், சந்கேதநபர்களை ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Post a Comment
Post a Comment