மூட்டைத் தொல்லைக்கு மூட்டை கட்டப்பட்டது



புகையிரத பாதுகாப்பு அதிகாரிகள் ஆரம்பித்த வேலை நிறுத்தம் சுமார் ஒரு மணித்தியாலங்களின் பின்னர் நிறைவுக்கு வந்துள்ளதாக புகையிரத திணைக்களம் கூறியுள்ளது. 

அவர்களின் ஓய்வு அறைகள் உள்ளிட்ட சில இடங்களில் இருக்கின்ற மூட்டைப்பூச்சிகள் தொடர்பாக சரியான தீர்வு ஒன்று கிடைக்காததன் காரணமாக அவர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர். 

மருதானை மற்றும் கொழும்பு கோட்டை புகையிரத நிலையங்களின் புகையிரத பாதுகாப்பு அதிகாரிகளே இவ்வாறு பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர். 

குறித்த நேரப் பகுதியில் எந்தப் புகையிரதங்களையும் இரத்து செய்யும் தேவை ஏற்படவில்லை என்றும், ஒரு புகையிரதம் மாத்திரம் தாமதமானதாகவும் ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் கூறியது.