பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு வாகனம் ஹய்லெவல் வீதியின் மாயா சுற்றுப்பாதைக்கு அருகில் வைத்து, மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதுண்டு நேற்று(2) விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தில் பாதிக்கப்பட்ட மோட்டார் சைக்கிளின் சாரதிகளுபோவில வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பெரியமொரு பாதிப்பு இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் குறித்த நபரின் மணிக்கட்டு எலும்பு வெடித்துள்ளதாக கூறப்படுகின்றது.
இவ்விடயம் தொடர்பில் வாகன பாதுகாப்பு அதிகாரியை வெள்ளவத்தை பொலிஸார் கைதுசெய்து, பின்னர் பிணையில் விடுவித்துள்ளனர்.


Post a Comment
Post a Comment