பத்து வருடங்களுக்கு முன்னர் ஸ்ரீலங்கா இராணுவப் புலனாய்வாளர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் மற்றும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவன், சகாதேவன் நிலக்ஷன் அவர்களது நினைவேந்தல் நிகழ்வு தற்பொழுது யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் நடைபெற்றுவருகிறது.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் சட்டத்துறைத் தலைவர் கு.குருபரன் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வில் நிலக்ஷனின் பெற்றோர் அன்னாரின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து ஈகைச் சுடர் ஏற்றியுள்ளனர்.
பல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஊடகவியலாளர்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர்.


Post a Comment
Post a Comment