#IsmailUvaizurRahman)
#ACCIDENT
கடந்த 13.08.2017 இல் அட்டாளைச்சேனையில், பாலமுனை பிரதான வீதியைச் சேர்ந்த M. சகாப்தீன் (வயது 65)ஓய்வு நிலைத் தபால் உழியர் விபத்தில் மரணமடைந்தார். துவிச் சக்கரை வண்டியில் வந்து கொண்டிருந்தவர் மீது, மிக வேகமாக வந்த நீர் வழங்கல் வடிகால் அமைப்பு சபை முகாமையாளர் ஒருவர் செலுத்திய வாகனத்தால் அந்த விபத்து நேர்ந்தது.
சுமார் 3KM துாரம் வரைக்கும் விபத்தில் சிக்கியவரின் உடலம் இழுத்துச் செல்லப்பட்தாகஅங்கிருந்த பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். மது போதையில் வாகனம் செலுத்தியதால் அவ் விபத்து ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஆத்திமுற்ற பொதுமக்கள் குறித்த வாந்தியெடுத்துக் கொண்டிருந்த சாரதி மீது தாக்கியுள்ளனர். பின்புதான் மக்களுக்கப் புரிய வந்துள்ளது, குறித்த சந்தேக நபரானவர் நீர் வழங்கல் வடிகால் அமைப்பு சபை முகாமையாளர் என்பதாக.
குறித்த சந்தேக நபரானவர் அம்பாரை வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்டு, அம்பாரை நீதிபதியினால், வைத்தியசாலையில் பார்வையிடப்பட்டு, எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்க கட்டளையிட்டிருந்தார்.
இதே வேளை, இன்றைய தினம் அக்கரைப்பற்றில் நீதிமன்றில், நகர்வு மனுவின் மூலம் பிணை வழங்குமாறு சந்தேக நபர் சட்டத்தரணி சந்திரமணி விஸ்வலிங்கம் முலம் கோரியுமிருந்தார். அக்கரைப்பற்று பொலிசார் குறித்த சந்தேக நபருக்கு பிணை வழங்குவதற்கு தமது ஆட்சேபனையினையும்,இன்றைய தினத்தில் தெரிவித்திருந்தனர்.
அவரது பிணை மனுவினை அக்கரைப்பற்று மாவட்ட நீதிபதியும், நீதவானுமாகிய ஏ.பீற்றர் போல் நிராகரித்தது எதிர்வரும் 28 வரை விளக்க மறியலில் வைக்கும் ஏற்கனவே வழங்கப்பட்ட கட்டளையை தொடரும் எ்னறும் தெரிவித்தள்ளார்.



Post a Comment
Post a Comment