டுபாயில் இருந்து வந்தவர் விமான நிலையத்தில் மரணித்தார்



கட்டுநாயக்க விமான நிலையத்தில் பிரயாணி ஒருவர் திடீர் என உயிரிழந்துள்ளார்.
தெல்தெனிய பிரதேசத்தினை சேர்ந்த 49 வயதுடைய நபரே இதன்போது உயிரிழந்துள்ளார்.
அவருக்கு திடீர் என மாரடைப்பு ஏற்பட்டுள்ளமை காரணமாக இவ்வாறு உயிரிழந்துள்ளதாக விமான நிலைய சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.
இன்று அதிகாலை சவூதி அரேபியாவில் இருந்து இலங்கை வந்துள்ள பயணியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.