மூன்றாவது போட்டியை புதுமுக வீரர்கள் சிறப்பாக பயன்படுத்த வேண்டும்!



இந்தியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியை புதுமுக வீரர்கள் சிறந்த வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என இலங்கை அணித்தலைவர் தினேஷ் சந்திமால் குறிப்பிட்டார்.
இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும், இறுதியுமான டெஸ்ட் போட்டி கண்டி – பல்லேகெலே மைதானத்தில்,இன்று (12) ஆரம்பமாகவுள்ளது.
தொடரை 2 – 0 என்ற கணக்கில் ஏற்கனவே இந்தியா கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில், நடைபெறவுள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டியில் உபாதை காரணமாக ரங்கன ஹேரத் விளையாட மாட்டார் எனவும்
இளம் வீரர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி திறமையை வெளிப்படுத்தி, போட்டியை வெற்றிகொள்ள முடிந்தால், அது அணிக்கு பாரிய நம்பிக்கையளிக்கும் எனவும் தினேஷ் சந்திமால் தெரிவித்தார்.