Midtown Inner Wheel கழகத்தின் தலைவியாக சட்டத்தரணி ஜெயந்தி வினோதன்



Midtown Inner Wheel கழகத்தின் தலைவியாக சட்டத்தரணி ஜெயந்தி வினோதன் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
இவர் வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் முன்னாள் சட்ட ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்.
The Inner Wheel Club இன் கொழும்பு மாவட்டத்தின் 40 ஆவது தலைமையைத் தேர்ந்தெடுக்கும் நிகழ்வில், நடப்பாண்டு மற்றும் 2018 ஆம் ஆண்டிற்கான தலைவியாக ஜயந்தி வினோதன் தெரிவாகியுள்ளார்.
ஜெயந்தி வினோதன் தலைமையிலான கொழும்பு மாவட்ட The Inner Wheel Club இன் மூலம் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், கல்வி மற்றும் மருத்துவ தேவைகளுக்கும் முன்னுரிமை வழங்கப்படவுள்ளது.
சர்வதேச Inner Wheel Club உலகின் பாரிய பெண்கள் தன்னார்வத் தொண்டு நிறுவனமாக செயற்படுவதுடன், இது 103 நாடுகளில் செயலுருவாக்கம் பெற்றுள்ளது.