அரசியல் அமைப்பு பேரவையின் இடைக்கால் அறிக்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவால் பாராளுமன்றத்தில் இன்று சமர்பிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்பித்ததன் பின்னர் பிரதமரால் விசேட உரை ஒன்றும் நிகழ்த்தப்பட்டது.
அரசியல் அமைப்பு பேரவையின் இடைக்கால அறிக்கையின் நிபந்தனைகளுக்கு தேசிய அரசாங்கத்தின் பிரதான இரண்டு கட்சிகளும் இணக்கம் தெரிவிக்குமாயின் தாமும் அதற்கு இணங்குவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவித்துள்ளதாக பிரதமர் தனது உரையில் தெரிவித்துள்ளார்.
இலங்கை ஒற்றையாட்சி நாடாக மாற வேண்டும் என இந்த அறிக்கையின் முதலாவது பந்தியில் பிரேரிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
அதிகார பகிர்வு தொடர்பிலும் அரசியல் அமைப்பு பேரவையின் இடைக்கால அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகவும் பிரதமரின் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post a Comment
Post a Comment