(க.கிஷாந்தன்)
அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் செனன் தோட்டத்தின் ஜீ.டி பிரிவில் அமைந்துள்ள யூதாததையூ கிறிஸ்தவ தேவாலயம் ஒன்று இடிந்து விழுந்துள்ளது.
குறித்த இந்த சம்பவம் 11.09.2017 அன்று மாலை இடம்பெற்றுள்ளதாக நேரில் கண்ட பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கடந்த காலங்களில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக இந்த அனர்த்தம் ஏற்பட்டிருக்கலாம் என பிரதேசவாசிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். குறித்த தேவாலயம் இந்த தோட்டத்தில் 31.05.1987ம் ஆண்டு நிர்மானிக்கப்பட்டு திறப்பு விழா செய்யப்பட்டுள்ளது.
இத் தேவாலயத்தில் வாராந்த ஆராதனை பூஜைகள் மற்றும் சிறுவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் என மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது.
கடந்த காலங்களில் அட்டன் பகுதியில் பெய்து வந்த கடும் மழையில் பல்வேறு கட்டிடங்களில் வெடிப்புகள் ஏற்பட்டும் மண்சரிவுகளும் இடம்பெற்றிருந்தது.
இந்த நிலையில் 11.09.2017 அன்று மாலை மேற்படி தேவாலயத்தின் சுவர்கள் இடிந்தும், கூரைக் உடைந்தும் விழ்ந்துள்ளதுடன், ஒரு பகுதியில் சுவர் சாய்ந்த வண்ணத்துடன் தேவாலயத்தில் பொருத்தப்பட்டிருந்த சொரூபத்தில் பகுதியளவு சேதமாகியிருந்ததை காணக்கூடியதாக இருந்தது என்பது குறிப்பிடதக்கது.


Post a Comment
Post a Comment