அக்கரைப்பற்று வம்மியடியில் மதகு அமைக்கக் கோரிக்கை



அக்கரைப்பற்று வம்மியடியில் Culvert அமைக்குமாறு RDA Chairman இடம் அப்பிரதேச மக்கள் கோரிக்கை
*********************
அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் வம்மியடிப் பிரதேசம் மாரி காலத்தில் மழை நீர் ஓட முடியாத நிலையில் அதிகம் தேங்கி வெள்ளக் காடாகக் காணப்படும் பிரதேசமாக காணப்படுகின்றது. அதன் காரணமாக அக்கரைப்பற்று 04 ஆம் குறிச்சியிலிருந்து 06 ஆம் குறிச்சி வரையிலான பிதேசங்கள் நீரில் மூழ்கி அப்பிரதேச குடியிருப்பாளர்கள் வசிக்கும் வீடுகளுக்குள் மழை நீர் உட்புகுந்தும், அப்பிரதேசத்தினூடாக பயணம் செய்த மோட்டார் வாகனங்களுக்குள்ளும் மழை நீர் உட்சென்று வாகனங்களும் பழுதடைந்து
விபத்துக்குள்ளான நிலைமை 2016 ஆண்டு டிசம்பர் மாதத்தில் இடம் பெற்றுள்ளது.
அவ்வேளையில் அக்கரைப்பற்று மாநகர சபையின் மாநகர ஆணையாளர் களத்தில் உடன் செயற்பட்டு மாநகர சபையின் ஊழியர்கள் மற்றும் பொது மக்களின் உதவியுடன் நிலமையை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தார்.
அதற்கான காரணம் யாதெனில் அம்பாரை பிரதான வீதியில் வம்மியடி எனுமிடத்தில் ஏற்கனவே அமையப் பெற்ற பழைய சிறிய அளவிலான கல்வெட் (Culvert) உள்ளது. அக்கல்வெட்டானது Culvert தற்போதைய நிலமையில் மழை நீர் வேகமாக வழிந்து ஓடும் வகையிலான நிலைமைகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் அமையப் பெறாததன் காரணமாகவே அப்பிதேசம் நீரில் மூழ்கிக் காணப்பட்டது.
வம்மியடியில் பெரிய அளவிலான Culvert அமைக்க வேண்டுமென பல முறை அக்கரைப்பற்று பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மற்றும் அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களிலும் கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டது.
இந்த வீதியினூடாக RDA இற்குச் சொந்தமான பல வாகனங்கள் நாளாந்தம் பல தடவைகள் சென்று வருகின்ற போதிலும் இதுவரையில் 09 மாதங்கள் கடந்த நிலையில் அதற்கென காத்திரமான நடவடிக்கைகள் எதுவும் இடம் பெற்றிருப்பதாகத் தெரியவில்லை.
அக்கரைப்பற்றில் RDA இன் மேலதிக மாகாணப் பணிப்பாளர் காரியாலயம் மற்றும் நிறைவேற்றுப் பொறியியலாளர் காரியாலயங்கள் அமையப் பெற்ற போதிலும் அக்கரைப்பற்று வம்மியடியில் இதுவரையில் Culvert அமைக்க முடியாதவர்களாகவே அவர்கள் காணப்படுகின்றனர்.
அக்கரைப்பற்று பிரதேச மக்கள் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் RDA Chairman தவிசாளரிடம் அக்கரைப்பற்று அம்பாரை வீதியில் பெரிய அளவிலான Culvert ஒன்றினை அமைத்துத் தருமாறு கோரிக்கையினை முன்வைக்கின்றனர்.