ஜப்பான்: கடலில் இலங்கையர் மூழ்கினர்



ஜப்பான், ஷிமோடா நகரின் யஷிமி ஒஹாமா கடற்பகுதியில் இலங்கை, கண்டியைச் சேர்ந்த இருவர் நீரில் மூழ்கி வபாத்தாகியுள்ளனர்.

கண்டி, ஹத்தரலியத்தயைச் சேர்ந்த வாகன விற்பனை வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த முஹமத் அலி மற்றும் சமித் அலி ஆகிய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள அதேவேளை சுமார் 14 பேர் கொண்ட குழுவுடன் நீராடச் சென்றிருந்த நிலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிசார் மேலதிக விசாரணைகளைத் தொடர்வதாகவும் உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன.