பொத்துவில்: குப்பை கொட்டியோருக்கு அபராதம்



-எம்.எஸ்.எம்.ஹனீபா-
அம்பாறை, பொத்துவில் ஜும்ஆ பள்ளிவாயலுக்கு முன்பாகவும், பாடசாலைக்கு அருகிலும் குப்பை கொட்டிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட இரு நபர்களுக்கு, பொத்துவில் நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வஹாப்தீன், தலா ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து,  இன்று வெள்ளிக்கிழமை (22) விதித்துள்ளார்.
பொத்துவில் பொலிஸாரால் குறித்த நபர்கள் இன்று வெள்ளிக்கிழமை (22) கைது செய்யப்பட்டிருந்தார்.
குறித்த நபர்களை பொத்துவில் நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வஹாப்தீன் முன்னிலையில் இன்று (22) ஆஜர் செய்தபோதே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.