சு.க உறுப்பினர்கள் பொதுஜன முன்னணியில்



ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து விலகிய கிழக்கு மாகாண ச​பை உறுப்பினர்கள் மூவரும் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணிக்கு தமது ஆதரவை வழங்க தீர்மானித்துள்ளனர்.
அம்பாறை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எம்.டீ வீரசிங்க , டீ.எம்.ஜயசேன,சந்ரா தெவரப்பெரும ஆகியோரே இவ்வாறு ஒன்றிணைந்த எதிரணியுடன் இணைந்துள்ளனர்.
எதிர்வரும் 30 ஆம் திகதியுடன் கால எல்லை நிறைவடையவுள்ள கிழக்கு மாகாண சபையின் இறுதி அமர்வு இன்று(28) நடைபெற்றது .இதில் பங்கேற்காத குறித்த மூவரும் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தியிருந்தனர்.