செயலாளராக கணபதிபிள்ளை கருணாகரன் பதவியேற்பு



(அப்துல்சலாம் யாசீம்)
கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி காணி மற்றும் காணிகள் அபிவிருத்தி திறன்
மற்றும் மனிதவலு அபிவிருத்தி மகளிர் விவகாரம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின்
செயலாளராக இலங்கை நிருவாக சேவை விசேட தரத்தை சேர்ந்த திரு
கணபதிபிள்ளை கருணாகரன் பதவியேற்றுக் கொண்டார்.
இந்நியமனமானது கிழக்கு மாகாண ஆளுனர் ரோகித போகொள்ளாகம
அவர்களிகால் மேற்கொள்ளப்பட்டது.
இப்பதவி ஏற்பதற்கு முன்னர் சுகாதார அமைச்சின் செயலாளராகவும் கிழக்கு
மாகாண பேரவைச் செயபலாளராகவும் பிரதி பிரதம செயலாளராவும் கிழக்கு
மாகாண சபையில் பல வருடங்களாக சேவையாற்றியுள்ளார்.
1991 ஆண்டு இலங்கை நிருவாக சேவைக்கு சேர்த்துக் கொள்ளப்பட்ட இவர்
மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பிரதேச செயலாளர் பிரிவுகளில் பிரதேச
செயலாளராக கடமையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடதக்கதாகும்.
கடந்த 2005 ம் ஆண்டு ஜனாதிபதி புலமைப் பரிசில் பெற்று ஐக்கிய
இராச்சியத்தில் உள்ள லண்டன் மெற்றோ பொலிற்றின் பல்கலைக்கழகத்தில்
சர்வதேச பொது முகாமைத்துவத்தில் முதுமாணி பட்டத்தையும் பேராதனை
பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான மானி பட்டத்தையும ரஜரட்ட
பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டத்தையும் பெற்றுள்ளார்.
இவர் மட்டக்களப்பு களுதாவளை மஹா வித்தியாலயம்-சிவானந்தா வித்தியாலயத்தின் பழைய மாணவராவார்.