(க.கிஷாந்தன்)
இலங்கை மனித உரிமைகள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட நடமாடும் சேவை, ஒன்று கொட்டகலை விநாயகர் ஆலய மண்டபத்தில், 23.09.2017 அன்று நடைபெற்றது.
இலங்கை மனித உரிமைகள் அமைப்பின் மத்திய மாகாணப் பணிப்பாளர் கந்தசாமி கலைச்செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்த நடமாடும் சேவையில், அக்கரைப்பற்று மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் அந்தோனிசாமி பீட்டர் போல், பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
நடமாடும் சேவையின் போது 200 பேருக்கு இலவச மூக்கு கண்ணாடிகள் வழங்கப்பட்டதுடன், வலது குறைந்தோருக்கு பிளாஸ்டிக் கை பிரம்பு, சக்கர நாட்காளிகள் என்பன வழங்கப்பட்டன.
மேலும், 13 பாடசாலைகளை சேர்ந்த தலா 10 மாணவர்களுக்கு, கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டதோடு, இரத்ததான முகாமும் இடம்பெற்றது. அத்தோடு கௌரவிப்பு நிகழ்வும், கலை, கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அமைப்பின் முக்கியஸ்தர்கள், பத்தனை பொலிஸார், அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் என பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.



Post a Comment
Post a Comment