இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் விவசாயத் துறையில் மற்றுமொரு மைல்கல் எட்டப்படுவதைப் பதிவு செய்யும் வகையில், விவசாய சேவைக்காலப் பயிற்சி நிலையம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களால் மட்டக்களப்பில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையத்தின் மீள் நிர்மாண செயற்பாடுகள், ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய ஸ்தாபனத்தினால் 456,600 யூரோக்கள் (82 மில்லியன் ரூபாய்) செலவில் மேற்கொள்ளப்பட்டன.
இந்த நிகழ்வில் ஜனாதிபதி கலந்து கொண்டு உரையாற்றுகையில், ´இந்த நாட்டின் வறுமையை ஒழித்து, மக்களின் பொருளாதாரத்தை பலப்படுத்தலுக்கு நான் முன்னிலை அளித்துள்ளேன்.
எமக்கு தேவையான உணவுகளை நாம் நம் நாட்டிலேயே உற்பத்தி செய்துக்கொள்வது அவசியம்.
ஒரு விவசாய நாடாக, வேளாண்மை சார்ந்த அனைத்து நிறுவனங்களையும் நாம் பலப்படுத்த வேண்டும். இச்சேவைக்காலப் பயிற்சி நிலையமானது இப்பிரதேசத்திற்கான அத்தியாவசிய தேவையாகும்.
ஆகவே, இந்த நிறுவனத்தை கட்டியெழுப்புவதற்கு நிதி உதவிய ஐரோப்பிய ஒன்றியத்திற்கு, அரசாங்கம் மற்றும் பொதுமக்கள் சார்பில் நான் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய ஸ்தாபனமானது வேளாண்மை விருத்திக்கு ஊக்கமளித்தலென்பது மிகவும் பாராட்டத்தக்க விடயமாகும்.
கண்டி கன்னோருவை பயிற்சி நிலையத்தைப் போல கரடியனாறு விவசாய சேவைக்கால பயிற்சி நிலையமும் முன்னேற்றமடைய வேண்டியது அவசியமாகும்.
இந்த நிலையத்தின் மேலதிக அபிவிருத்திக்காக நான் ரூ.25 மில்லியனை வழங்குகிறேன்.´ எனத் தெரிவித்தார்.
கரடியனாறில் 1980ஆம் ஆண்டு நிறுவப்பட்ட விவசாய சேவைக்கால பயிற்சி நிலையம், கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த விவசாய விரிவாக்க அலுவலர்களுக்கு விசேட பயிற்சிகளை வழங்கியதுடன், அலுவலர்களுக்கும், விவசாயிகளுக்கும் வதிவிட பயிற்சிகளையும் வழங்கி வந்தது.
அத்துடன், பண்ணைச் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்த இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சிகளை வழங்கும் நடவடிக்கைகளையும் முன்னெடுத்திருந்தது.
அதன் செயற்பாடுகள் முழுமையாக முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில், 1986ம் ஆண்டு யுத்தம் காரணமாக இந்த நிலையம் முற்றாக அழிவடைந்தது.
இதனைத் தொடர்ந்து மூன்று தசாப்த காலமாக இந்த நிலையம் செயலற்ற நிலையில் காணப்பட்டது.
இந்த நிலையம் செயற்படாததன் காரணமாக மாகாணத்தைச் சேர்ந்த விவசாய அலுவலர்களுக்கு கன்னோருவ, அங்குனுகொலபலெஸ்ஸ மற்றும் அரலகன்வில ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள விவசாய சேவைக்கால பயிற்சி நிலையங்களுக்கு செல்ல நேரிட்டிருந்தது.
மொழிப்பிரச்சினை மற்றும் பயணம் செய்யும் தூரம் போன்றன குறைந்தளவான அலுவலர்கள் இந்த நிலையங்களை நாட காரணமாக அமைந்திருந்தன.
இதன் காரணமாக கிழக்கு மாகாணத்தில் தினசரி விவசாய செயற்பாடுகளில் உயர் தொழில்நுட்பங்களின் பயன்பாடு குறைவாக காணப்பட்டது.
2016 ஒக்டோபர் மாதம் ஐரோப்பிய ஒன்றியத்தின் மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தினூடாக ஆரம்பிக்கப்பட்டு மீள்நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த விவசாய சேவைக்காலப் பயிற்சி நிலையத்தின் (EU-SDDP) மூலம் 150க்கும் அதிகமான விவசாய அலுவலர்கள் ஒவ்வொரு ஆண்டும் பயன் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவின் முதல் கவுன்சிலர் வில்லெம் வேர்பொயெஸ்ட் கருத்துத் தெரிவிக்கையில், ´இலங்கையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் மூலமாக முன்னெடுக்கப்படும் மாபெரும் அபிவிருத்தி நடவடிக்கையாக நுரு-ளுனுனுP அமைந்துள்ளது.
இந்தத் திட்டத்தினூடாக, வடக்கு மற்றும் கிழக்கைச் சேர்ந்த 7 மாவட்டங்களுக்கு யுத்தத்தின் பின்னரான நிலையிலிருந்து மீள்நிர்மாணம் மற்றும் அபிவிருத்திக்கான உதவிகளை ஐரோப்பிய ஒன்றியம் வழங்கி வருகிறது.
உணவு பாதுகாப்பு, வறுமை ஒழிப்பு மற்றும் உள்ளடக்கமான பொருளாதார வளர்ச்சி போன்றவற்றில் விவசாயத்துறை அபிவிருத்தி முக்கியத்துவம் வாய்ந்ததாக நாம் கருதுகிறோம்.
கிழக்கு மாகாணத்தில் அமைந்திருந்த ஒரே விவசாய சேவைக்கால பயிற்சி நிலையத்தின் மீள்நிர்மாண நடவடிக்கைகள் போன்ற உட்கட்டமைப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவதனூடாக, விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் வினைத்திறன் வாய்ந்த சேவைகளுக்கு பங்களிப்பு வழங்குவதாக அமைந்திருக்கும்´ என்றார்.
கரடியனாறு பிரதேசத்தில் உயர் தொழில்நுட்ப வசதிகளைக் கொண்ட விவசாய சேவை பயிற்சி நிலையத்தை நிறுவுவதற்கு ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய ஸ்தாபனத்துடன் ஐரோப்பிய ஒன்றியம் கைகோர்த்திருந்தது.
இந்நிலையம் தளபாட வசதிகளைக் கொண்ட மாநாட்டு அறையொன்றை கொண்டுள்ளது, இதில் 300 பேர் வரை ஒரே வேளையில் அமர்ந்திருக்க முடியும், விரிவுரை அறைகள், விடுதிகள் மற்றும் நூலகம் என்பனவும் காணப்படுகின்றன.
மேலும், நிலைபேறான காணி முகாமைத்துவம், சூழல்பாதுகாப்பான பண்ணைச் செய்கை, மழைநீர் சேகரிப்பு, நுண்-நீர்ப்பாசனம், பாதுகாப்பான விவசாயம் மற்றும் வீட்டுத்தோட்ட செயற்பாடுகள் போன்றவற்றுக்கு அவசியமான பயிற்சிகளை பெற்றுக்கொடுப்பதற்கு, 20 ஏக்கர் காணிப்பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
நிலையத்தின் முறையான மற்றும் தொடர்ச்சியான பயிற்சிகள் ஊடாக வெவ்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்களாக கிழக்கு மாகாணத்தில் விவசாய அலுவலர்களை உருவாக்கப்படுவார்கள்.
இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான குயுழு பிரதிநிதி நினா பிரான்ட்ஸரப் கருத்துத் தெரிவிக்கையில், ´விவசாய அதிகாரிகள் சிறந்த செயற்பாடுகளை பகிர்ந்து, நிபுணத்துவமாக செயலாற்றினால் விளைச்சல் உற்பத்தித்திறனில் அதிகரிப்பு, உயர் தரமான தயாரிப்புகள் மற்றும் சிறந்த வருமானம் போன்றவற்றை விவசாயிகளுக்கு எய்த முடியும்.
பண்ணை மாதிரிகள் தொடர்பான பயிற்சிகள் மற்றும் விளக்கங்கள் ஊடாக பெற்றுக்கொண்ட திறன்கள், அறிவு மற்றும் உளநிலை மாற்றம் போன்றன கிழக்கு மாகாணத்தில் விவசாய துறையின் நவீன மயமாக்கலை மேம்படுத்த உதவுவதுடன், சகல தரப்பினரின் பொருளாதார மற்றும் சமூக செயற்பாடுகளை மேம்படுத்த ஏதுவாக அமைந்திருக்கும்´ என்றார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் 60 மில்லியன் யூரோக்கள் நிதி உதவியில், ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஐந்து முகவர் நிறுவனங்கள் மற்றும் சர்வதேச நிதித்தாபனம் ஆகியவற்றினால் செயற்படுத்தப்படும் EU-SDDP நிகழ்ச்சித்திட்டம், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட ஏழு மாவட்டங்களைச் சேர்ந்த அரை மில்லியனுக்கும் அதிகமான மக்களை உள்வாங்கி, இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி செயற்திட்டங்களுக்கு பங்களிப்பு வழங்கும் வகையில் அமைந்துள்ளன.

Post a Comment
Post a Comment