வெல்லாவெளி, கிராமங்களுக்கு தண்ணீர்த் தாங்கிகள்



வெல்லாவெளி பிரதேச செயலகப் பிரதேசத்தில் 10 கிராமங்களுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி புலம்பெயர்ந்த நோர்வே தமிழ் உறவுகளின் அனுசரணையுடன் 2 இலட்சம் ரூபா பெறுமதியான தண்ணீர் தாங்கிகளை வழங்கி வைத்துள்ளது. 

இந்த நிகழ்வு வெல்லாவெளி மாரியம்மன் ஆலய முன்றலில் இன்று (09) இடம்பெற்றது. 

கட்சியின் பிரதேச இணைப்பாளர் பா.குமாரசிங்கம் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் அதிதியாக கட்சி மாவட்ட இணைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் கலந்துகொண்டார். 

காந்திபுரம், களுமுந்தன்வெளி, வெல்லாவெளி, விவேகானந்தபுரம், சரவணையியூர், வேற்றுச்சேனை, இளைஞர் விவசாயத் திட்டம், புன்னைக்குடா, புலாவெளிவேம்பு, தும்பங்கேணி ஆகிய 10 கிராம மக்களின் கோரிக்கையினை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

முதற்கட்டமாக அடிப்படை குடிநீர் பிரச்சனையை தீர்க்கும் வகையில் தண்ணீர் தாங்கிகள் அதற்கான நிறுத்திகள் என்பவற்றை வழங்கி வைத்தனர்.