(க.கிஷாந்தன்)
அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டன் கொழும்பு பிரதான வீதியில் அட்டன் மல்லயைபூ சந்தியில் 15.10.2017 அன்று காலை 5.30 மணியளவில் வேன் ஒன்று வீதியை விட்டு விலகி மாகவெலி ஆற்றிற்கு நீர்வழங்கும் அட்டன் ஓயாவில் சுமார் 150 அடி பாதாளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் கடும் காயங்களுக்குள்ளனான இருவர் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பிலிருந்து தீபாவளி விடுமுறைக்காக வந்த வேனே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் கடும் காயங்களுக்குள்ளான இருவர் பொலிஸ் மட்டும் பிரதேசவாசிகளின் கடும் பிராயத்தனத்திற்கு மத்தியில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
ரொசல்ல பகுதியை சேர்ந்த குறித்த வேன் கொழும்புக்கு கூலிக்காக சென்று அங்கிருந்து தீபாவளி விடுமுறைக்காக வரும் சுமார் பத்து பேரை ஏற்றிக்கொண்டு அட்டன் நோக்கி வந்துள்ளது.
விபத்து ஏற்பட்ட இடத்திற்கு சுமார் ஒரு மீற்றர் தொலைவில் இரண்டு பேரை இறக்கிவிட்டு வந்து கொண்டிருந்த போதே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. இவ்விபத்தில் இருவர் மாத்திரம் கடும் காயங்களுக்குள்ளாகியுள்ளதுடன் ஏனைய ஆறு பேர் சிறிய சிராய்வுகளுக்கு மாத்திரம் உட்பட்டுள்ளளனர்.
காயமடைந்தவர்கள் அட்டன் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என்றும் சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை காரணமாக இவ்விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிப்பதாகவும், சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


Post a Comment
Post a Comment