வரிப்பத்தான்சேனை அல் அமீன் ம. வி. 1AB பாடசாலையாகியது




ஹபீஸுல் ஹக் ( பாதிஹி )
வரிப்பத்தான்சேனை அல் அமீன் மகா வித்தியாலயலையம் 1AB பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டுள்ளது . அல் ஹம்துலில்லாஹ் .
கலைப்பிரிவை மாத்திரம் உள்ளடக்கிருந்த எமது பாடசாலை க.பொ. உயர்தரத்தில் தொழில்நுட்ப பாடப்பிரிவும் அமைப்பதற்கான அங்கிகாரம் கல்வி அமைச்சால் வழங்கப்பட்டுள்ளது . வெளியூர்களில் தங்கி உயர்தரம் படித்து வந்த எங்களுக்கு எமது ஊரில் தங்கி எமது பாடசலையில் தாம் விரும்பிய துறைகளைப் படிக்க முடியும் என்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கின்றது. அந்தவகையில் எமது பாடசாலையை தரம் உயர்த்துவதற்கு அருள் புரிந்த அல்லாஹ்வுக்கும் இதற்காக தனது முயற்சியை அர்பனம் செய்த அதன் அதிபர் , ஊர் தலைவர்கள் கல்விமான்கள் துறை சார்ந்தவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்.

இறுதியாக பாடசாலை அதிபருக்கு
இந்த தொழில்நுட்ப பிரிவுக்கான மிக முக்கியமான வளம் ஆசிரியர்வளம் இந்த வளங்கள் உங்களிடம் குறைவாக உள்ளது இதை நீங்கள் கைவிடாமல் பாதுகாக்க வேண்டும் . மேலும் இந்த வளங்களை அதிகரிப்பதற்கு தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். அதேபோல் எமது ஊரில் இந்த துறைக்கூரிய இடமாக மாற்றுவதற்கு எமது ஊரில் ஆலோசனை தரக்கூடிய கல்வி மாண்களையும் சேர்த்து பயணியுங்கள் நிச்சயமாக எமது மாணவர்களுக்கு நல்ல எதிர்காலம் உண்டு இது எனது பணிவான வேண்டுகோள் .
இப்படிக்கு
ஊர் நலம்விரும்பி
ஹபீஸுல் ஹக் ( பாதிஹி )